Advertisment

'செங்கோட்டையன் சொல்லுவார்; ஆனால் விஜய்யால் முடியாது'-அமைச்சர் முத்துசாமி பேட்டி

1015

DMK Photograph: (MUTHUSAMY)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.  அதேபோல் விஜய்யின் த.வெ.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமியிடம், ''செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்திக்கையில் உங்களை மாஜி  நண்பர் என்றும் ஜெயலலிதா, எம்ஜிஆரை போல் திமுகவை தோற்கடிக்கும் சக்தி விஜய்யிடம் தான் இருக்கிறது. விஜய் தான் அடுத்த முதல்வர். அவர்தான் தலைமைச் செயலகத்தில் கொடியேற்றுவார்' என்று சொல்லி இருக்கிறார். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்குப் பதிலளித்த முத்துசாமி, ''மாஜி நண்பர் என்று செங்கோட்டையன் சொல்லி இருக்கிறார். ஆனால் இன்றைய வரை நண்பர் என்றால் நண்பர் தான். அதில் ஒன்று மாற்றம் இல்லை. செங்கோட்டையன் விஜய் பக்கம் இருப்பதால் அப்படித்தான் சொல்லுவார். வேண்டுமானால் தலைமைச் செயலகம் பக்கத்தில் வேறு ஏதாவது இடத்தை வாங்கி கொடியேற்றிக் கொள்ளலாம். ஆனால் தலைமைச் செயலகத்தில் விஜய் கொடி ஏற்றுவதற்கு வாய்ப்பில்லை. ஈரோடு மேற்கு தொகுதிக்கு விருப்பமான கொடுத்திருக்கிறேன்'' என்றார்.

K. A. Sengottaiyan tvk vijay muthusamy dmk Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe