2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தீவிரமாகத் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அமமுக, தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 

Advertisment

இதுதொடர்பாக காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமித் ஷாவின் நிலைப்பாடு திருப்தி அளிக்கவில்லை. துரோகத்தின் மொத்த உருவமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தொண்டர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறார். துரோகம் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் இல்லை. முன்னதாகவே பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறி இருந்தார்.

அந்த நேரம் வரும் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசவுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி பேசுகையில், ''ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டார். டி.டி.வி.தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டார். முன்னாள் தமிழக பாஜக தலைவர் வெளியே வரப் போகிறார். அவர் பாஜகவில் தொடரப் போவதில்லை. இவர்கள் மூன்று பேரும் பேசிக்கொண்டு செயல்படுவது போல தான் தெரிகிறது. செங்கோட்டையனுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். நாளை நீங்கள் நல்ல முடிவுக்கு வர வேண்டும். நாளைக்கு  இனிமேல் உங்களை யாரும் பேச மாட்டார்கள் விட்டுவிடுவார்கள். என்னுடைய அன்பான வேண்டுகோள் செங்கோட்டையன் நல்ல முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.