விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தனித்து களம் காண உள்ள தவெகவும் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, தவெகவின் கட்சிக்கூட்டங்களும், நிர்வாகி கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், செங்கோட்டையன் தொண்டர்களிடையே உரையாற்றி வருகிறார். அதில், "தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலின் ஹீரோ விஜய் தான். தவெக தலைவர் விஜய் கை காட்டுபவர் தான் சட்டமன்ற உறுப்பினர். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தவெகவில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி கிடைக்கப்போகின்றது. நாம் யாரை கைக் காட்டுகிறோமோ, அந்த இரண்டு லட்சம் பேர் தான் தமிழ் நாட்டில் பதவிக்கு வர முடியும். அதனால் தொண்டர்கள் கவலைப்படத் தேவை இல்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். அது தான் நம் கொள்கை.
தமிழ்நாட்டில் எல்லோரும் பொருளாதாரத்தில் உயர வேண்டும். அனைத்து மக்களும் சமம் தான் என்ற நிலை தமிழ் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். சாதி, மத பேதமற்ற சமுதாயம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் உருவாகவுள்ள, அனைத்து மக்களும் சமம் மற்றும் அனைத்து மக்களுக்கும் உயர்வான பொருளாதாரம் என்ற நிலையைத் தான், இந்திய நாடே பின்பற்றுகிறது. இந்த வரலாறு தமிழ்நாட்டிலே உருவாக இருக்கிறது. விஜய் நினைத்தால், இந்தியாவின் தென்மாநிலங்கள் அனைத்தும் அவர் பின்னால் நிற்கும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/24/tvk-vijay-1-2026-01-24-23-02-07.jpg)
ஐம்பது ஆண்டு கால அரசியலில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உடன் நான் பயணத்திருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய அரசியலில், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மக்களுக்கு என்ன செய்கிறது? என மக்கள் கேள்வி கேட்டுகொண்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு ஒரே பதில் தவெகவின் தலைவர் விஜய், வருங்காலத்தில் தமிழ் நாட்டின் முதல்வராக வர வேண்டும் என்பது தான். விஜய்க்கு வாக்களிக்க லட்சக்கணக்கோர் வெளிநாட்டில் இருந்து வருகை தர ஆர்வமாக உள்ளனர்" என்று பேசியிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/24/tvk-kas-2026-01-24-23-01-18.jpg)