சுதந்திர போராட்ட வீரரான வேலு நாச்சியாரின் நினைவு நாள் இன்று (25-12-25) தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக வேலு நாச்சியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் தவெக, தமிழகம் முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தில் வேலு நாச்சியாருக்கு மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், “எம்.ஜி.ஆரை கழகத்தில் இருந்து தூக்கி எறியும் நேரத்தில் இதே நிலை அன்றைக்கு உருவாகியது. அதை போல் தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகள் 2 கட்சிகள் தான் இருக்க வேண்டுமா? ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு ஒரு தலைவர் தேவை என்று மக்கள் மட்டுமல்ல இளைஞர்கள் மனதில் நிறைந்திருக்கிறது. ஆகவே ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு ஒரு புதிய தமிழகத்தை உருவாக்குவதற்கு தலைவர் சொன்ன பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். மக்கள் சக்தியோடு அவர் ஆட்சியில் அமர்வது எந்த சக்தியாலும் முடியாது. அதற்காக அவருடன் நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருந்து இரவு பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன பட்டியல், வேறு இடத்திற்கு சென்றவர்கள், ஒருவரே இரண்டு இடத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் ஆகியோரை நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதில் கவனம் செலுத்தி உண்மையிலேயே வாக்களிக்கக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்து அந்த பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தவெகவில் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “அவருடன் இருக்கிற மாவட்டச் செயலாளர்கள் பல்வேறு கருத்துக்களை சொல்லிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானோர், தவெகவில் செல்ல வேண்டும் என்று கருத்துக்களை சொல்லிருக்கிறார்கள். அதை ஓ.பன்னீர்செல்வம் தான் முடிவு செய்வார். கூட்டணி குறித்து யாரும், யாரிடமும் பேசலாம் கருத்து கூறலாம். அதை தலைமை தான் முடிவு செய்யும். அதிமுகவில் இருந்து முக்கியமான புள்ளிகள் வருவார்கள், மிக விரைவில் வந்துவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/25/opssengo-2025-12-25-11-36-12.jpg)