Advertisment

“துரோகத்திற்கான நோபல் பரிசு இ.பி.எஸ்.ஸுக்கு கொடுக்க வேண்டும்” - செங்கோட்டையன் பேட்டி!

eps-sengottaiyan-1

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது செங்கோட்டையன் வீட்டிற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எங்களை பொறுத்தவரையிலும் இந்த இயக்கம் (அதிமுக) வலிமையாக இருக்க வேண்டும். இந்த இயக்கத்தை பொறுத்தவரையிலும் நாங்கள் சிந்தாமல் சிதறாமல் மீண்டும் இந்த இயக்கம் வழிநடத்தச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் என்னை உறுப்பினராக இன்றைக்கு நீக்கினாலும் கூட விதியின் அடிப்படையில் என்னை நீக்கவில்லை. 

Advertisment

அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை விரைவில் அறிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  தொடர்ந்து நான் இந்த கட்சியிலே (அதிமுக) இயங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்குப் பிறகு நீக்கியதற்கு என்ன காரணம்?, விதிகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதற்கான முடிவுகளை வழக்கறிஞரோடு கலந்து பேசி முடிவுகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறேன். 

Advertisment

என்னை பொறுத்தவரையிலும் துரோகம் என்று சொன்னாலே அதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டியது அவருக்குத் தான் என்பதை நான் இந்த நேரத்திலே வலியுறுத்துகிறேன். ஏனென்று சொன்னால் அவர் அடிக்கடி சொல்லுவார் திமுகவைப் பற்றிப் பொய் சொல்வதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று சொல்வார். எல்லோருக்கும் துரோகம் செய்கின்ற நோபல் பரிசு யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் கொடுக்க முடியுமே தவிர யாருக்கும் கொடுக்க இயலாது” எனப் பேசினார்.

admk edappadi k palaniswami K. A. Sengottaiyan nobel prize
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe