Advertisment

“ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்துகின்ற அளவிற்கு...” - செங்கோட்டையன்

se

sengottaiyan says Jayalalithaa also strengthened admk movement by donating all her jewelry

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதே போல், செங்கோட்டையன் திமுகவின் பி-டீம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.   இந்த நிலையில், ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் இன்று (09-11-25) செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது அவர், “மக்களுக்கு தேவையான பணிகளைத்  தொடர்ந்து ஆற்றுவேன்.  மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்ற முறையிலே தான்  45 ஆண்டு காலம் என்னுடைய பணிகளை செய்து  வருகிறேன்.  என்னை பொறுத்தவரையிலும்  இளவரசரை போல என்றைக்கும் இருந்ததில்லை.  எளிமையான வாழ்க்கை நடத்துபவன்.  அப்படி நடத்திய காரணத்தின் அடிப்படையில் தான்  மூன்று முறை வாக்காளரைத் , தேர்தல் களத்திலே வருகை தந்து நேரமில்லாத நேரத்தில்  நீ எங்கள் வீட்டு பிள்ளை என்ற முறையில்  அனைவரும் வாக்களித்து வெற்றி பெற்ற வரலாறு  இந்த தொகுதியிலே இருக்கிறது.  ஆகவே, இந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள்  இந்த பகுதியை சார்ந்திருக்கிற வாக்காள  பெருமக்கள், கழகத்தின் முன்னோடி  பொறுப்பாளர்கள் நம்முடைய கூட்டணியைச்  சார்ந்தவர்கள்.   யாருக்கு மேலே கருத்துக்கள் சொல்வது  சரியாக இருக்காது.

Advertisment

நேற்றை முந்தினம் தொடர்ந்து எனக்கு  பல்வேறு சங்கங்கள் சார்பாக கடிதங்கள்  எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் கண்ணீர் சிந்துகின்ற  அளவிற்கு அந்த கடிதங்கள் அங்கே  இருக்கிறது. உங்குடைய தியாகத்தை பற்றி, உங்குடைய  உழைப்பை பற்றி, நீங்கள் செய்கின்ற சேவையைப் பற்றி யாரும் கொச்சைப்படுத்தி விடக்கூடாது  என்ற முறையில் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. உழைப்பவரை எவராலும்  வீழ்த்த இயலாது.  ஆகவே, தான் உழைக்கின்ற இறைவன் எம்.ஜி.ஆரை  எந்த சக்தியாலும் வீழ்த்த  முடியவில்லை. உழைப்பால் உயர்ந்தவர்,  தியாகத்தால் உயர்ந்தவர், கருணை உள்ளம் படைத்தவர் மன்னிக்கின்ற தன்மை படைத்தவர் , கஷ்டங்கள் அந்த கஷ்டத்தில்  தொண்டர்களுக்காக முன்னின்று தியாகத்தை. 

அதே போலதான் ஜெயலலிதாவும் தியாக  வழியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, தன்னிடத்திலே இருக்கிற இயக்கத்தை காப்பதற்கு  நகை பொருள்கள் அனைத்தும்  1989ல்  வழங்கி இந்த இயக்கத்தை  வலிமைப்படுத்தினார்.  அவர்களை பொறுத்தவரையிலும் மன்னிக்கின்ற  உள்ளம்,  கருணை உள்ளம், தொண்டர்களை காப்பதற்கு என்ன  நாம் உருவாக்க வேண்டுமோ அதை மனதிலே வைத்துதான் அந்த பணிகளை சீரோடும்  சிறப்போடும் நடத்தினார்கள்.  அந்த வழியிலே நாங்களும் இந்த பயணங்களை மேற்கொண்டு வருகிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

Erode admk sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe