அதிமுகவின் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது செங்கோட்டையன் வீட்டிற்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை தந்து ஆதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எம்.ஜி.ஆரின் புனித பயணத்தில் அன்று உறுப்பினராக மட்டுமல்லாது செயலாளராக இருந்து பணியாற்றியவன். எம்.ஜி.ஆரோடு தன் பயணத்தை மேற்கொள்கிற போது 1975இல் கோவையில் நடைபெற்ற முதல் பொதுக்குழு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழு நடைபெற்றது. 

Advertisment

அப்போது அதிலே முழுமையாக அரங்கநாயகம் , மணிமாறன், எனக்கும் அந்த வாய்ப்பை எம்.ஜி.ஆர். வழங்கினார். முழுமையாக அந்த பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நாங்கள் ஆற்றி எம்.ஜி.ஆரின் பாராட்டுகளைப் பெற்றேன். அதற்குப் பிறகு ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்திற்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு இரவு பகல் பாராமல் ஜெயலலிதா எந்த திசை நோக்கி விரல் காட்டுகிறார்களோ அந்த திசை நோக்கி என் பயணங்களைச் சிறந்த முறையிலே தடம் புரளாமல் சலனத்திற்கு நான் இடம் வராமல் என் பணியை ஆற்றி இருக்கிறேன் என்பதை ஜெயலலிதாவே திருச்சியிலும் என்னுடைய திருமணத்திலும் நடைபெறுகிற போது எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

Advertisment

இமயமே தன் தலையில் விழுகிறது என்றாலும் சருக்காமல் வழுக்காமல் இந்த இயக்கத்திற்கு விசுவாசமுள்ள தொண்டனாக இருக்கின்ற காரணத்தின் அடிப்படையிலே தான் இத்தனை பொறுப்புகளை நான் அவருக்கு வழங்கி இருக்கிறேன் என்று ஜெயலலிதா குறிப்பிட்டதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் சரி இந்த இயக்கம் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரோடும் சேர்ந்து என்னுடைய பணிகளை அயராமல் நான் ஆற்றி இருக்கிறேன். ஆகவே அப்படி பணியாற்றிய பிறகு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த இயக்கம் உடைந்துவிடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் 2 முறை எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்ற போது கூட அந்த வாய்ப்பை நான் இந்த இயக்கம் ஒரு சிறிதளவு கூட ஏதாவது தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற  நோக்கத்தோடு தான் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்திருக்கிறேன் என்பதும் நாடறியும்.

அப்படிப்பட்ட நிலையில் இன்று அதிமுகவின் பணிகளை நாங்கள் ஆற்றிக்கொண்டிருக்கிற நேரத்தில் கழகப் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதற்குப் பிறகு 2019, 2021 அதுமட்டுமல்லாமல் மாநகரம், பேரூராட்சி, நகராட்சி அதற்குப் பிறகு 2024 என அவர் எடுத்த முடிவின் காரணமாக  பல்வேறு சோதனையின் காரணமாகக் கழகம் (அதிமுக) வெற்றி வாய்ப்பை இழந்த நிலையும் நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்” எனப் பேசினார். 

Advertisment