2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தீவிரமாகத் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் (விசிக), மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய கட்சிகள் மீண்டும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம், எதிர்க்கட்சியான அதிமுக, பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அமமுக, தற்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக காட்டுமன்னார்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அமித் ஷாவின் நிலைப்பாடு திருப்தி அளிக்கவில்லை. துரோகத்தின் மொத்த உருவமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தொண்டர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்கிறார். துரோகம் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் இல்லை. அவர் எங்கு சென்றாலும் தன்னை முதல்வராக மாற்றிக் கொள்கிறார். அவரது அகங்கார ஆணவப் பேச்சு முறியடிக்கப்பட வேண்டும்.

நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக டிசம்பர் 6ஆம் தேதி அமுமுக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவு எடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். இது குறித்து டிசம்பர் 6ஆம் தேதிஎங்களின் நிலைப்பாட்டை கூறுகிறோம்”  என்றார்.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “, அது அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் கூற முடியாது. அவர் மனதில் எண்ண நினைத்து  ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றினைய வாய்ப்பில்லை என கூறினார் என்பது எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் யாரவது தொடர்பு கொண்டு பேசினார்களா என்ற கேள்விக்கு அனைத்து கேள்விகளும் நாளை பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

Advertisment

எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருந்து வரும் செங்கோட்டையன் டிடிவி. தினகரன், ஒ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து தனி அணியாக செயல்படலாம் என்று கூறப்படுகிறது.