அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைந்தார். சென்னையின் பனையூரில் அமைந்துள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார்.
அதோடு செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் எம்.பி.யுமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகள் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் வருகை தந்து த.வெ.க.வில் இணைந்து கொண்டனர்.
விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் செங்கோட்டையன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். அவரோடு, முன்னாள் எம்.பி சத்தியபாமா, ஆதவ் அர்ஜுனா, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/27/se-2025-11-27-17-02-54.jpg)