முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் எடப்பாடி பழனிசாமி குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அதே போல், செங்கோட்டையன் திமுகவின் பி-டீம் என்று எடப்பாடி பழனிசாமியும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்.

Advertisment

இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. செங்கோட்டையனை, த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மற்றும் அக்கட்சியின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியானது. மேலும், செங்கோட்டையன் நாளை மறுநாள் (27.11.2025) த.வெ.க. வில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ முடிவை செங்கோட்டையன் விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் இருந்து சென்னைக்குக்கு புறப்பட்ட செங்கோட்டையனிடம், தவெகவில் இணைகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கையெடுத்து கும்பிட்டு பதிலளிக்காமல் தனது காரில்  சென்றார்.