Sengottaiyan Interview about Vijay's public meeting in Erode
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நாளை 18ஆம் தேதி (18.12.2025) காலை 11.00 மணிக்கு தவெக கட்சி தலைவர் விஜய்யின் ‘ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை அக்கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் கட்சி தரப்பிலும் செங்கோட்டையன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், செங்கோட்டையன் இன்று (17-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஈரோடு மாவட்டம் விஜயமங்கலகத்தில் விஜய் சிறப்புரை நல்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை நான்கே நாட்களுக்குள் மிக பிரமாண்டமாக பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த கடுமையான பணியை மூன்றே நாட்களுக்குள் முடித்து சிறந்த முறையில் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எங்களை பொறுத்தவரையிலும் தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே பார்வையிட்டு சென்றிருக்கிறார். ஆகவே அதற்கான பணிகள் என்னென்ன பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரோ அத்தனை பணிகளையும் நிறைவேற்றி தேவையான வசிகளை கூடுதலாக செய்யப்பட்டிருக்கிறது .
14 ஆம்புலன்ஸ் ஏறத்தாழ 58 மருத்துவர்கள், அதற்கான செவிலியர்கள் உட்பட இருக்கிறார்கள். அவசர சிகிச்சைக்காகவே தனியாகவே அங்கங்கே முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து சிகிச்சை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தேவையான அளவிற்கு குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக 10 லாரிகளை தண்ணீரை கொண்டு வந்து ஆங்காங்கே வருகின்றவர்களுக்கும் அந்த குடிநீரை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குடிநீர் தேவை எவ்வளவோ, அந்த தேவைகளை பூர்த்தி செய்கின்ற அளவிற்கு அந்த பணிகளை செய்யப்பட்டிருக்கிறது. வருகின்றவர்களுக்கு என்ன தேவையோ அந்த தேவைகளை நிறைவு செய்கின்ற வகையில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே அனைவரும் சிறப்பாக தங்கள் பணிகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைகின்ற அளவுக்கு இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
தலைவர் நிற்கின்ற இடத்தில் இதுவரையிலும் இந்த அளவிற்கு பாதுகாப்பான இடம் அமைத்திருக்க முடியாது. ஆகவே சிறந்த முறையில் இந்த பணிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். இது ஒரு மாடலாகவே மற்ற மாவட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். மக்களை பொறுத்தவரையிலும் ஒரு சந்தேகம் இருக்கிறது. பாஸ் வேண்டுமா? கியூஆர் கோடு வேண்டுமா என்று இன்னும் சில பேர் கேட்டு கொண்டிருக்கிறார். மக்கள் வருகை தந்து சிறப்பான முறையில் அவருடைய உரையை கேட்டுவிட்டு மகிழ்ச்சியோடு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. கியூஆர் கோடு தேவையில்லை, பாஸ் தேவையில்லை. பொதுமக்கள் தாங்களாக வந்து மகிழ்ச்சியோடு செல்லலாம்” என்று கூறினார்.
Follow Us