Advertisment

“திடீர் டெல்லி பயணம் ஏன்?” - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி!

selvaperunthagi-pm-4

சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக - காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான்  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (15.02.2026) நடைபெற்றது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டார்.

Advertisment

இந்த கூட்டத்தில், “ஆட்சியில் பங்கு தர வேண்டும். அதிக எண்ணிக்கையிலான கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சியில் 30 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்” எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மானம் வாசிக்கப்படும் போது மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்தில் இல்லை. இந்த தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட பின்னரே மாணிக்கம் தாகூர் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். இது கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவை மறைமுகமாக சீண்டி வருகிறார் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் மற்றும் பாதயாத்திரை நாளை (17.02.2026) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பங்கேற்க உள்ளார். 

selvaperunthagai-mic

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அவசர பயணமாக இன்று (16.02.2026) மதியம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் செல்வபெருந்தகையின் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இது தொடர்பாக செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது  மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் ஒரு கூட்டம் நடத்தி ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று  சொல்லிருக்கிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு செல்வப்பெருந்தகை, “இது குறித்து எனக்குத் தெரியாது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை என்ன வழிகாட்டுகிறதோ அந்த வழிகாட்டுதல் படி இயங்குகிறவன் தான் செல்வப் பெருந்தகை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  எங்களுக்குக் கடந்த 17ஆம் தேதி என்ன வழிகாட்டுதல்  சொன்னார்கள் என்றால், ‘யாரும் பொதுவெளியில் கூட்டணியைப் பற்றிப் பேசக்கூடாது’ என்றார்கள். இதனையே ராகுல் காந்தியும் கூறியுள்ளார். மேலும் மல்லிகார்ஜுன கார்கே சொல்லிருக்கிறார் வேணுகோபால் சொல்லிருக்கிறார். 

raghul-ani-pm

ராகுலை விட, மல்லிகார்ஜுனா கார்கேவை விட யாராவது பெரியவர்கள் இருக்கிறார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. நான் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியுடைய வழிகாட்டுதலை மதிப்பவன். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி என்ன சொல்கிறதோ அந்த வழிகாட்டுதலில் அடிப்படையில் அரசியல் நடத்திக் கொண்டுள்ளோம். ஐந்து நபர்கள் கொண்ட கமிட்டி கிரீஷ் சோடாங்கர் தலைமையில் நியமித்திருக்கிறார்கள். அந்த கமிட்டி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர், “பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் மீது மாநில தலைவரான நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா?” என்ற கேள்விக்கு, அது குறித்துப்  பேசத் தான் இன்றைக்கு அழைத்து இருக்கிறார்கள். இன்றைக்குப் பேசப் போகிறோம். ஆலோசனை செய்வோம். ஜனநாயகத்துக்கு முரணாக அகில இந்தியக் காங்கிரஸ் வழிகாட்டுதலுக்கு முரணாக யார் நடந்தாலும் தவறு தவறுதான்” எனத் தெரிவித்தார். 

Assembly Election 2026 Praveen Chakravarty Manickam Tagore raghul gandhi congress Selvaperunthagai Delhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe