சட்ட மாமேதை அம்பேத்கரின் 67வது நினைவு நாள் இன்று (06.12.2025) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பருந்தகை, மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாங்கள் (காங்கிரஸ்) ஏற்கனவே சொல்வதைப் போன்று இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. ஒற்றுமையாக இருக்கிறது. பலமாக இருக்கிறது. இந்தியா கூட்டணி என்பது இரும்பு கோட்டை போன்றது என்று சொல்கிறோம்.
இதனை எத்தனை முறை சொல்வது. திமுகவுடன் கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்துள்ளோம். திருநாவுகரசகர் ஒரு திருமண வீட்டுக்குப் போகும்போது, செங்கோட்டையன் வந்து அவரை பார்த்துப் பேசி இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஈரோட்டில் நடைபெற்ற ஒரு திருமணத்துக்குச் செல்கிறார். அப்போது சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது அங்கே பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் உதவியாளர் எல்லோரும் இருக்கிறார்கள். அப்போது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது நலம் விசாரிக்கிறார்கள். இது எப்படி அரசியல் பேசினார்கள் என்று சொல்ல முடியும்?.
ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் முடிவு. அகில இந்தியத் தலைமை திமுகவோடு கூட்டணி பேசுவதற்கு ஐவர் குழுவை நியமித்திருக்கிறார்கள். நாங்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை மரியாதை நிமித்தமாக இந்த குழு போய் சந்தித்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன கூறினார் என்றால், ‘மகிழ்ச்சி நாம் பேசுவோம். நாங்கள் (திமுக) குழு அமைக்கப் போகிறோம். விரைவில் விரிவாகப் பேசுவோம்’ என்று கூறியுள்ளார். இதில் என்ன பிரச்சனை. ஒரு பிரச்சனையும் இல்லையே?.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/congress-3m-team-2025-12-06-11-54-43.jpg)
இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது உடைக்கவும் முடியாது வலிமையான கூட்டணி இந்தியா கூட்டணி” எனத் தெரிவித்தார். மேலும், “சென்னை பட்டனபாக்கத்தில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய்யின் வீட்டில், காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யைச் சந்தித்துப் பேசியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் , “திருப்பியும் சொல்கிறேன். அதெல்லாம் எனக்குத் தெரியாது” எனப் பதிலளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/rahul-praveen-chakaravarthi-tvk-vijay-selvaperunthagai-2025-12-06-11-53-43.jpg)