Advertisment

“திமுக மீது வருத்தம் இருக்கிறது” - குரலை மாற்றிய செல்வபெருந்தகை!

sel

SelvaPerunthagai expresses regret over DMK after Congress meeting in Delhi

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரப் பணிகளில் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஈடுபாடு காட்டியது. ஆனால், திமுகவில் தற்போது வரை கூட்டணி தொடர்பான குழு அமைக்கப்படாததால் காங்கிரஸ் சங்கடத்தில் இருந்து வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில், காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுகள், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசி வந்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதே கோரிக்கையை முன்வைத்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே ராகுல் காந்தியின் நெருக்கமான வட்டாரத்தில் இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். இதனால், காங்கிரஸ் திமுகவில் இருந்து பிரிந்து தவெகவுடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல் வெளியாகி கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.

Advertisment

திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்று கேள்வி எழுந்த நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும், கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றும் காங்கிரஸ் தலைமை தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் கராராக கூறியதாகத் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காக அமைப்பு ரீதியாக மொத்தமுள்ள 77 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களை அழைத்து டெல்லியில் காங்கிரஸ் தலைமை இன்று (10-02-26) ஆலோசனை நடத்தியது. அதன்படி 71 மாவட்டத் தலைவர்கள், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி குறித்தும் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு வலுப்படுத்துவதும் குறித்தும் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டம் முடிந்த பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லியில் செய்தியாளர்களளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களின் கலந்தாய்வு கூட்டமும் பயிற்சி முகாமும் நடந்தது. இந்த கூட்டத்தில் பல கருத்துக்கள் கட்சியுடைய வளர்ச்சியைப் பற்றி பரிமாறப்பட்டது, பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தலில் கடினமாக உழைக்க வேண்டும், நம்முடைய அணி வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் குழப்பம் இல்லை. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான தேர்தல் பணிக்குழு திமுக இன்னும் நியமிக்கவில்லை என்று எல்லோரும் வருத்தப்பட்டு இந்த கூட்டத்தில் சொன்னார்கள். ஒரு ஒரு ஐந்து ஆண்டுகளுக்கும் தேர்தலுடைய பரிணாம வளர்ச்சி, தேர்தல் செயல்பாடுகள் எல்லாம் மாறி கொண்டே இருக்கிறது. எல்லாரும் அட்வான்ஸாக களத்துக்கு போகிறார்கள். காங்கிரஸ் தலைவர்களுடைய வேதனை என்னவென்றால், கடைசி நிமிடத்தில் செயல்படுத்தி வேட்பாளர்களை நியமித்து களத்துக்கு அனுப்புவது தான்.

எங்களுக்கு நிறைய படிப்பினை உண்டு. பீகார், ராஜஸ்தானில் குறிப்பாக கடந்த மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ஆகிய தேர்தல்களில் கடைசி நிமிடத்தில் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இந்த அனுபவத்தை எல்லாம் வைத்து முன்னதாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு யாருக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அவர்கள் களத்தில் பணியாற்ற வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. அதனால், சில சங்கடங்கள் இருப்பதாக எல்லோரும் இன்றைக்கு பேசினார்கள். அதையும் நாங்கள் உள்வாங்கி இருக்கிறோம். எனவே உடனடியாக கமிட்டியை நியமிக்க வேண்டும் என்பது தான் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அது தான் எங்கள் எல்லோருடைய கருத்து. காங்கிரஸ் தலைமை எல்லோருக்கும் வருத்தம் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் வெளியில் சொல்ல முடியாது. தலைவர்கள் என்ன வலியுறுத்தி இருக்கிறார்களோ அதை முதல்வரிடம் நாங்கள் நாளைக்கே சென்று சொல்வோம்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்துக்கு வருவதற்கு எல்லா பிரோகிராமும் ரெடி. நாங்கள் ரெடி. ஆனால், பேச்சுவார்த்தை நடந்து தொகுதி பங்கீடு முடிந்தால் தானே அவர்களை கூட்டிட்டு வர முடியும். இதனால் எங்களுடைய பிராசஸ் தடை பெறுகிறது. ஒரு வாரம் கூட அவர்கள் நேரம் கொடுக்க மாட்டார்கள். அதற்குள் தேர்தல் வந்துவிடும். அதிருப்தி என்று சொல்ல முடியாது, ஆனால் இதை சீக்கிரம் முடிப்பது நல்லது என்று எல்லோருடைய அபிப்ராயம்” என்று கூறினார். 

Assembly election dmk Selvaperunthagai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe