Advertisment

“மக்கள் நலனுக்காக காங்கிரஸ் கட்சி உறுதியான அரசியல் போராட்டத்தை தொடரும்” - செல்வப்பெருந்தகை!

selvaperunthagai-1

வணிக  பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் முதல் தேதியில் விலை அதிகரிப்பு அல்லது குறைவு என மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்து 1,899.50 ரூபாய்க்கு இன்று (01.02.2026) முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

கடந்த ஜனவரி மாதம் 1849.50 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 50 ரூபாய் விலை உயர்ந்து 1,899.50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 868.50 பைசா என்ற அதே விலையில் தொடர்கிறது.

Advertisment

இந்நிலையில் காஸ் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது சிறு வணிகர்கள் மற்றும் உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் மக்கள் விரோத முடிவாகும். ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை மக்கள் மீது திணிப்பதாக உள்ளது.

gas-cylinder-price

விலையேற்றங்களின் மூலம் தோல்விகளை மறைக்கும் ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நலனுக்காகவும், விலையேற்ற அரசியலுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி உறுதியான அரசியல் போராட்டத்தை என்றென்றும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார். 

congress gas gas cylinder gas cylinder price lpg cylinder Selvaperunthagai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe