Advertisment

“இ.பி.எஸ். என்னை நன்றாகத் தான் வைத்துள்ளார்” - செல்லூர் ராஜு கலகல பேட்டி!

sellur-raju-pm-1

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்துப் பேசுகையில், “இன்றைக்கு இருக்கிற நோக்கத்தில் நமக்கு ஒரே என்ன பார்வை திமுகவை எதிர்க்க வேண்டும். அந்த பார்வையில் வந்தார்கள் என்றால் பரவாயில்லை. இந்த நேரத்தில் தன்னுடைய ஈகோவை பயன்படுத்த வேண்டும் என்பது தவறு. அதனால் நடவடிக்கை எடுக்கிறார். 

Advertisment

இதற்காக ஒருங்கிணைப்பதை அவர் பிடிக்காதா? அப்படி என்பது எல்லாம் ஒன்றும் இல்லை. யார் இந்த கட்சிக்கு நன்மை செய்வார்களோ அவர்களை வைத்துக் கொண்டு பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) கட்சி நடத்துகிறார். இதுதான் ஒரு கட்சியின் தலைமைப் பண்பு. ஒரு தலைமை என்று உருவாக்கிட்டால் அந்த தலைமை சொல்வதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தலைவரைக் கேட்காமல் செய்யக்கூடாது. ஊடகங்கள் மூலமாக என்னுடைய கருத்தைச் சொல்லுவது கூடாது. எனக்குக் கூட மன வருத்தம் இருக்கும். எனக்கே பல வருத்தம் இருக்கும். வருத்தம் இருக்கிறது என்பதற்காக  நான் கூடத்தில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா?. 

Advertisment

இது தொடர்பாகப் பொதுச்செயலாளரைப்  (எடப்பாடி பழனிசாமி) பார்த்து முறையாக முறையிட்டு அது மாதிரி தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் அப்புறம் அமைதியாக இருந்துகொண்டு அப்புறம் எப்போது சொல்கிறாரோ அப்போது கேட்க வேண்டும்” எனப் பேசினார். அதற்குச் செய்தியாளர் ஒருவர், “உங்கள் மனவருத்தத்தை பொதுச்செயலாளரிடம் சொன்னீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு செல்லூர் ராஜு, “அது இல்லைங்க. ஒரு எடுத்துக்காட்டுக்கு (example) சொன்னேன். என்னங்க தேவையில்லாத ஒரு டாபிக்கா போட்டு பிரேக்கிங் நியூஷ் என்று போட்டு விடாதீர்கள்.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு  மனுஷனுக்கு ஒரு மனவருத்தம் இருக்கிறது என்று என்னைச் சொல்லவில்லை. ஒரு உதாரணம் என்ன சொல்கிறேன் என்றால் ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனவருத்தம் இருக்கிறது என்றால்  அந்த மனவருத்தத்தைப் பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதற்காகப் பொதுச்செயலாளருக்கு எதிராக உள்ளவர்களிடம் சென்று கூறினால் சும்மா விடுவார்களா?. பொதுச் செயலாளர் எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பார். அதற்காகச் சொன்னால் நீங்கள் உடனே செல்லூர் ராஜ் கூறினார் என்று ஒரு பிரேக்கிங் நியூஸ்ல போட்டறாதீங்கப்பா.

ஒரு  இதுக்கு சொல்கிறேன். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு மனஸ்தாபம் இருக்கும் ஈகோ ப்ராப்ளம் இருக்கும். அதனைப் பொதுவெளியில் காட்டக்கூடாது. அது தொடர்பாகப் பொதுச்செயலாளரிடம் முறையாக முறையிட்டு அவரிடம் சொல்ல வேண்டும் என்று தான் சொல்கிறேன். என்னை சொல்லவில்லை. எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. என்னை நல்லா தான் வச்சிருக்காரு” எனப் பேசினார். 

K. A. Sengottaiyan Edappadi K Palaniswamy admk sellur raju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe