Selling homemade explosives - Tragic of two people lose Photograph: (thiruvallur)
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே பட்டாசு வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் வீட்டுக்குள் வைத்து நாட்டு வெடிகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநின்றவூரைச் சார்ந்த யாசின் என்பவர் தன்னுடைய நண்பருடன் பட்டாசு வாங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்பொழுது விற்பனை நடந்து கொண்டிருந்த வீட்டிற்குள் திடீரென உள்ளே இருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் இருவர் பலியாகி உள்ளனர்.
வீட்டுக்குள் வேறு யாரேனும் இருக்கிறார்களா எனத் தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் படையினர் தீயை அணைத்து இடுப்பாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனர் என்பது குறித்து தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். வீட்டுக்குள் இருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் அந்த பகுதியில் பயங்கர சத்தம் ஏற்பட்டது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதேபோல் இந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.