Selling alcohol on a trolley in the early hours of the morning - goes viral in Trichy Photograph: (trichy)
திருச்சியில் தள்ளுவண்டியில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் மதுபான கடைகள் மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், திருச்சியில் சமயபுரம் பகுதியில் அதிகாலை நேரத்திலேயே தள்ளு வண்டியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதிகாலையிலேயே குவிந்த குடிமகன்கள், வயதானவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் சட்டவிரோதமாக தள்ளுவண்டியில் வைத்து விற்கப்படும் அந்த மது பாட்டில்களை கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்வது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.