சென்னை விமான நிலையத்தில் செல்பி வீடியோ எடுக்கக்கூடிய பெட்டியில் வைத்து கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா மற்றும் உயர்தர மெத்தபட்டமைன் போன்ற போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் காவல்துறையினரால் கடத்தல் கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisment
586
selfie box.. Shock at Chennai airport Photograph: (chennai)

இந்நிலையில் தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 35 வயது ஆண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது அவரது உடைமைகளை சோதனை செய்த பொழுது அவர் வைத்திருந்த செல்ஃபி வீடியோ பெட்டியில் மொத்தம் எட்டு பாக்கெட்டுகளாக உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது தெரியவந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த கஞ்சாவின் மதிப்பு மூன்று கோடி ரூபாய் என மதிப்புடையது என சுங்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.