திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தானாக இயங்கிய சரக்கு லாரியை முதியவர் ஒருவர் தடுக்க முயன்ற நிலையில் முன்புறமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி முதியவர் உயிரிழந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் சகிப் அகமது என்பவர் கடந்த இரண்டு 20 ஆண்டுகளாக பழைய அட்டைகளை சேகரித்து விற்கும் கடை நடத்தி வருகிறார். தேவிகாபுரம் சாலையில் இந்த கடை அமைந்துள்ளது. இந்த கடையில் சிவலிங்கம் என்ற முதியவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இன்று வழக்கம்போல் காலையில் சிவலிங்கம் வேலைக்கு வந்துள்ளார். அப்பொழுது பழைய அட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நின்றது. அதேபோல் இந்த வண்டிக்கு முன்புறமாகவே மற்றொரு லாரியும் அட்டை லோடோடு நின்று கொண்டிருந்தது.

Advertisment

அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென ஆளில்லாமலேயே நகர்ந்து முன்புறம் நகர்ந்து வந்தது. இதனைப் பார்த்து சிவலிங்கம் கூச்சலிட்டுக் கொண்டே தடுக்க முயன்றுள்ளார். யாரும் வராததால் கையாலேயே தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். இதில் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கும் நகர்ந்த லாரியும் இடையே சிக்கி சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் லாரிக்குள் ஏறிய ஊழியர்கள் லாரியை பின்பக்கமாக இயக்கி சிவலிங்கத்தின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி தானாக நகரும் அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.