Advertisment

' சீமானின் போராட்டமெல்லாம் தேவையில்லாதது'-அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

a4676

'Seeman's struggle is unnecessary' - Minister Rajakannappan's speech Photograph: (dmk)

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடி முந்தல் பகுதியில் ஆடு மற்றும் மாடு மேய்க்கும் போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாடு மேய்க்கும் போராட்டம் கடந்த 03.08.2025 நடைபெற்றது. இதற்காக சுமார் ஆயிரத்திற்கு கிடை மாடுகள் போராட்டம் நடைபெற்ற பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. அதேபோன்று 200க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் கொண்டு வரப்பட்டன. அப்போது கையில் கம்புடன் தடையை மீறி மாடுகளை ஓட்டிச் சென்று சீமான் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் மாடு மேய்ப்பவர்கள், நா.த.க.வைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 
Advertisment
இந்நிலையில் நீலகிரி வனத்துறை சார்பில் வரையாடு கணக்கெடுப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், ''சின்ன விஷயங்கள் எல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கக் கூடாது. ஆடு மாடு மேய்ப்பதில் சீமான் போராட்டம்  நடத்தி இருக்கிறார். அதெல்லாம் தேவையில்லாதது. நாம தானே விவசாயி. அமைச்சராகிய நான் விவசாயி.
அரசியலில் பல வருடமாக இருக்கின்றேனே தவிர நான் ஒரு விவசாயி. அட்வகேட் படித்தேனே தவிர எனக்கு என்ன விவசாயம் தெரியாதா? மாடு தெரியாதா? ஆடு தெரியாதா? நான் கூட முதல்வரிடம் கால்நடை வளர்ப்பு வாரியம் அமைக்க வேண்டும் என சொல்லியிருக்கிறேன். அது பெண்டிங்கில் இருக்கிறது. தமிழக முதல்வர் அதுகுறித்து முடிவு செய்வார். ஆகவே இந்தியாவிலேயே சிறப்பாக பணியாற்றக் கூடிய வனத்துறையாக நாம பேர் வாங்க வேண்டும். அதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும்'' என்றார்.
rajakannappan dmk Naam Tamilar Katchi seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe