Seeman's release - court takes action Photograph: (seeman)
2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரும் மதிமுகவினரும் மோதிக்கொண்டது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரே விமானத்தில் திருச்சிக்கு வந்தனர். அப்பொழுது விமான நிலையத்தில் இருவரையும் வரவேற்க இருகட்சி தொண்டர்களும் கூடினர். அப்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
திருச்சியைச் சேர்ந்த மதிமுகவினர் நாம் தமிழர் கட்சியின் சீமான் மீதும், அக்கட்சி நிர்வாகிகள் மீதும் காவல்துறையில் புகார் அளித்தனர். அதேபோல் நாம் தமிழர் கட்சியினரும் மதிமுவினர் மீதும் புகார் அளித்திருந்தனர். இருகட்சியினருக்கும் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்த நிலையில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்ட அந்த சம்பவத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு திருச்சி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 16/07/2025 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வழக்கில் நேரில் ஆஜரானார். தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை 19-ம் தேதி வழங்க இருப்பதாக நீதிபதி கோபிநாத் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இரு தரப்பு மோதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட சீமான் உள்ளிட்ட 19 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
Follow Us