Seeman's angry outburst Why are branding it as 'Dravidian Pongal'?
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (10-01-26) சென்னையில் பொங்கல் பண்டிகை நடைபெற்றது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள். மக்களின் வாக்கை பற்றி கவலைப்படுபவர்கள் ஒரு கூட்டமாக இருப்பார்கள். மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிற நாங்கள் தனித்து நிற்போம். கூட்டத்தில் ஒருவனாக நிற்பதற்கு வீரமும் துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பதற்கு தான் வீரமும் துணிவும் தேவை. வணங்குகிற சாமியைப் பற்றி கவலைப்படுகிற ஒரு கட்சி இருக்கும், மக்களின் வாக்கை எப்படி எல்லாம் பறிக்கலாம் என்று நினைக்கிற ஒரு கட்சி இருக்கும். தேர்தல் அரசியலில் சிந்திக்கிற எல்லோரும் ஒரு பக்கம் நிற்பார்கள். மக்கள் அரசியல் பற்றி சிந்திக்கிற கூட்டம் நாங்கள் தனியாக நிற்கிறோம்.
விளம்பர அரசியல் செய்தி அரசியல் செய்கிற ஒரு கூட்டம் இருக்கும். அண்மையில் கொடுத்த மடிக்கணினியில் கலைஞர் படமும், முதல்வர் ஸ்டாலின் படமும் ஒட்டிருக்கிறது. இதைத்தான் விளம்பர அரசியல் என்று சொல்கிறோம். பொங்கலுக்கான உதவித்தொகை ரூ.3,000 கடந்தாண்டு கொடுத்திருந்தால் அது மக்கள் அரசியலாக இருந்திருக்கும். அடுத்த மாதம் தேர்தல் வரும் போது இப்போது கொடுப்பது தேர்தல் அரசியலாகப் பார்க்கிறோம்.
அதனால் இந்த பொங்கல் மக்களுக்கு தை பொங்கலாக இல்லாமல் தேர்தல் பொங்கலாக இருக்கிறது. இந்தியர், திராவிடர் என்பவர்க்கள் ஒரு கூட்டமாக இருப்பார்கள். நாங்கள் தமிழர்கள் தனித்து நிற்கிறோம். நம் மீது சுமத்தப்பட்ட திராவிட தீண்டாமை இழிவை துடைத்தெறிய போராடாமல் இருப்பதை விட செத்து ஒழிவதே மேலானது. தமிழனின் திருநாளை எதற்கு திராவிட பொங்கல் என்று அடையாளப்படுத்துகிறீர்கள்? இந்தியா மனிதர்கள் வாழுகிற நாடு” என்று ஆவேசமாகப் பேசினார்.
Follow Us