விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், “சீமானும், விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள்” எனப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “என்னையும், விஜய்யையும் பா.ஜ.க. பெற்றெடுத்த போது தொல். திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார்” எனத் தெரிவித்திருந்தார்.  

Advertisment

விசிக மாநில செய்தி தொடர்பாளர் கு.கா. பாவலன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆம் சீமானுக்கு, தொல். திருமாவளவன் தான் மேடையில் ஏற்றி பிரசவம் பார்த்தார். சீமானை மேடையில் ஏற்றியதே விசிகதான். ஆனால் அவர் பாஜகவின் தத்துவப் பிள்ளையாக பிறப்பெடுபார் என்று யாருக்குத் தெரியும்?' என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்பொழுது செய்தியாளர்கள் விசிக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதில் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய சீமான், ''பாஜகவுடன் கூட்டணி வைத்து மங்களூரில் சட்டமன்ற உறுப்பினர் ஆனது நானா திருமாவளவனா?வாஜ்பாய்க்கு வீரவணக்கம் செலுத்துவது அரசியல் நாகரீகம் என்கிறார் திருமாவளவன். நான் ஒரு மேடையில் பாரதியை பற்றி பேசியது அரசியல் நாகரீகம் இல்லாமல் அநாகரீகம் ஆகி விடுகிறதா? நான் திருமாவளவனை மதித்து ஒதுங்கிப்  போகிறேன். அவர் சொல்லும் எந்த கருத்தையும் நான் எதிர்த்துப் பேசி இருக்கிறேனா? காரணம் இந்த மோதலை எனக்கும் திருமாவுக்கும் ஆக்கிவிட்டு திராவிடர்கள் மஞ்சள் குளிப்பார்கள். அண்ணன் தம்பிக்குள் சண்டை போட வரவில்லை. 

எனக்கு எதிரி விடுதலை சிறுத்தைகள் இல்லை. திருமாவளவனையும் எதிர்ப்பதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. வைகோ, ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி இதெல்லாம் என்னுடைய எதிரி இல்லை. திராவிடர்-தமிழர் போர் நடக்கிறது. நான் திருமாவளவன் பேசாததை புதிதாக பேசி விட்டேன் என்றால் சொல்லுங்கள். தாய்மண்ணில் ரவிக்குமார் எழுதிய கட்டுரை இருக்கிறது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வந்த அந்த கட்டுரையை வெளியிடச் சொல்லுங்கள் திருமாவளவனை. அல்லது நான் வெளியிடுவதற்கு அனுமதி கொடுங்கள். அண்ணாவும் கலைஞரும் பெரியாரை எதிர்த்துப் பேசியதை விட நான் பேசி விட்டேன் சொல்லுங்கள். திமுக எதற்கு தொடங்கப்பட்டது? யாரை எதிர்த்து தொடங்கப்பட்டது? எதற்காக தொடங்கப்பட்டது? அதைச் சொல்லுங்கள். திராவிடர் கழகத்திலிருந்து திமுக ஏன் பிரிந்தது அதற்கு யார் பதில் சொல்வார்கள். இன்னும் பெரியாரை கைது செய்யாமல் ஏன் வைத்திருக்கிறீர்கள் என சட்டசபையில் பேசியது கலைஞரா இல்லையா? அதை விடவா நான் எதிர்த்து பேசி விட்டேன். நான் கேள்வி கேட்கிறேன். அதற்கு பதில்தான் சொல்ல வேண்டும்'' என்று ஆவேசமாக பேசினார்.

Advertisment