கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வதாக திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய், அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “விஜய்யின் பயணங்களுக்கு மழை இடையூறு இல்லாமல் உதவ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அவர் கட்சி, அவர் எப்படி கையாள வேண்டும் என்று நினைக்கிறாரோ அதை செய்யட்டும். சொன்னார்களே, செய்தார்களா? என்று பேசுகிறார். ஊரில் தண்டல்காரன் பேசுவது போல் அவர் பரப்புரை செய்கிறார். இதெல்லாம் ஒரு பரப்புரை என்று நினைக்கிறீர்கள். மக்களின் வலியை மனதில் இருந்து ஒருவர் மொழியில் எடுத்த பேச முடியவில்லை என்றால் இதெல்லாம் பரப்புரையா?.

Advertisment

என்னென்ன தொகுதியில் என்னென்ன பிரச்சனை இருக்கிறது என்பதை தரவுகளை வாங்கி பேசுகிறீர்கள். நான்கு நிமிடங்களோ, ஐந்து நிமிடங்களோ தான் பேசுகிறீர்கள். அதை நினைவில் வைத்து பேச முடியவில்லை என்றால் உங்களுக்கும் மக்களுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று பாருங்கள். பார்த்து தான் எழுதுவேன் என்று அடம்பிடித்துவிட்டு இருந்தால் ரொம்ப கஷ்டம். அவ்வளவு மக்கு மாணவர்களுக்கு இங்கு மதிப்பெண் கிடையாது. பார்த்து படிக்கும் போதே அது மண் அரிப்பா? மீன் அரிப்பா? எனத் தெரியவில்லை. ரொம்ப கஷ்டம்.

விஜய் தற்போது பிரச்சாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசையை எடுத்து பிச்சுப்போட்டு உப்புமாவை கிண்டிருக்கிறார். இங்கே அண்ணாவை வைத்திருக்கிறார், அங்கு எம்.ஜி.ரை வைத்திருக்கிறார். இதில் என்ன மாற்றம் இருக்கிறது?. இது ஒரு சனியன், அது ஒரு சனியன் இரண்டு சனியன்களை எடுத்து போட்டு சட்டையை போட்டிருக்கிறார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பிவிடுகிறார்” என்று காட்டமாக விமர்சனம் செய்தார். 

Advertisment