மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்கடைத்தெருவில் நாம் தமிழர் கட்சி சார்பாக, ‘பெரியாரைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் இன்று (03.01.2026) பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கலந்து கொண்டு உரையாற்றுகையில், “ராமதாசுக்கு வேண்டுமானால் எங்கள் ஐயா ஈ.வெ.ரா பெரியாராக இருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய பிள்ளைகளுக்கு ராமதாஸ் தான் பெரியார். எப்படி பெரியார்? ஒற்றை மகனாக இந்த நாடும் அதிகாரமும் பெற்று தராத உரிமையை இந்திய நிலப்பரப்பு எங்கும் பயணித்து ஆட்சி இல்லை, அதிகாரம் இல்லை, பதவி இல்லை, பட்டமில்லை. எல்லா மாநில தலைவர்களையும், நாட்டின் பெரும் பெரும் தலைவர்களை எல்லாம் சந்தித்து மன்டல் குழு என்கிற ஒன்னை உருவாக்க வைத்து அதை பரிந்துரைத்த 69 விழுக்காடு இட ஒதுக்கிட்டை பெற்று தந்தவர் ஆனைமுத்து 

Advertisment

ஆனைமுத்து யார்?. பெரியார். அவர் வழியிலே அவர் போட்ட அடிச்சுவட்டிலே பயணித்து தமிழ் பேரின மக்களுக்கான உரிய வகுப்புவாரி பிரதிநித்துவத்தை இட பகிர்வை பெற்று தர போராடி 21 வன்னிய மறவர்கள் இன்னுயிரை ஈந்து போராட்டத்தை தமிழ்நாட்டை உறைய வைத்து போராடி அந்த உரிமையை பெற்று கொடுத்த பெரியவர் ராமதாஸ். தமிழ் பேரினத்தின் பெரியவர். 85 வயதில் தெருவிலே இறங்கி தமிழை தேடி என்று தெருவிலே நடைபயணம் சென்ற தமிழ் பெருந்தகை ராமதாஸ். தமிழ் பேரினத்தின் பெரியார். அடங்க மறு அத்து மீறு திமிறி எழு திருப்பி அடி என்ற முழக்கத்தை முன்வைத்து ஆண்டாண்டு காலமாக தாழ்த்தி வீழ்த்தப்பட்ட ஆதி தமிழ் குடி சமூகத்தை கிளர்ந்தெழ செய்து அமைப்பாய் திரள்வோம் என்று அரசியல் படுத்தி உதிரிகளாக இருந்த மக்களை ஒன்று திரட்டி ஒரு தலைமையின் கீழே கூட்டி இன்றைக்கு ஆட்சி அதிகாரங்களில், சட்டமன்றம், பாராளுமன்றத்திற்குள் செல்கிற வாய்ப்பை பெற்று கொடுத்தார்.

Advertisment

இன்று வரை அதே நோக்கத்திற்காக போராடி கொண்டிருக்கிற திருமாவளவன் தான்ப் உங்களுக்கெல்லாம் பெரியார். அவருக்கு வேண்டுமானால் ஐயா ஈவேரா பெரியாராக இருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய பிள்ளைகளுக்கு வருங்கால தலைமுறைக்கு திருமாவளவன் எங்களுக்கு பெரியார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான  நாதக வேட்பாளரை சீமான் அறிவித்தார். அதன்படி திருவிடைமருதூர் தொகுதிக்கான வேட்பாளராக திவ்ய பாரதி, பூம்புகார் தொகுதிக்கான வேட்பாளரா இளைய நகுலன், மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளராக காசிராமன், சீர்காழி தொகுதிக்கான வேட்பாளராக  அம்பேத்ராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.