Advertisment

“உன் வேட்டி சேலையும் வேணாம்.., ஓசி பஸும் வேணாம்....” - பாட்டு பாடி தூள் கிளப்பிய சீமான்!

sentk

Seeman sang at the NTK conference

திருச்சி ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்டம மாநாடு இன்று (21-02-26) நடைபெற்றது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 117 பெண் வேட்பாளர்கள் உட்பட 234 234  வேட்பாளர்களை அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து இந்த மாநாட்டில் பேசிய சீமான் திமுக, அதிமுக என இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.

Advertisment

இந்த மாநாட்டின் போது பழைய பாடல் ஒன்றை தனக்கே உரித்தான பாணியில் மற்ற கட்சிகள் செய்யும் அரசியலை விமர்சித்து பாடினார். அதில் அவர், “ஆயிரம் ரூபாய் தாராம்...அரிசி பருப்பு தாராம்... என் அத்த மகளை வாடி, நம்ம ஓட்டு போட்டு வருவோம்.. ஆயிரம் ரூபாய் வேணாம், உன் அரிசி பருப்பு வேணாம் ஓட்ட விவசாயிக்கு போட்டா இது எல்லாம் வரும் தானா...ஏ கொலுசு முக்குத்தி தாராம் புள்ள,  குடிக்க குவாட்டரும் தாராம்.. கூட கொஞ்சம் வாடி நம்ம ஓட்டு போட்டு வருவோம்...இப்படி குடிக்க வச்சு தானே நல்ல குடிய கெடுத்த கூட்டம், கூறுகெட்ட மாமா, நான் கூட வரமாட்டேன்... ஏ வேட்டி சேலை தாராம்.., அடி ஓசி பஸும் தாராம்... ஓட்டுக்கிட்டு வாடி நம்ம ஓட்டு போட்டு வருவோம்... உன் வேட்டி சேலையும் வேணாம், ஓசி பஸும் வேணாம்.. வேலை வெட்டி தந்தா இத வாங்கிக்குவேன் தானா...

Advertisment

ஏ மிக்ஸி, கிரண்டரும் தாராம்.. அடி, மசாலா சாமானும் தாராம்.. என் மாமன் பொண்ண வாடி, நம்ம ஓட்டு போட்டு போட்டு வருவோம்.... உன் மிக்ஸி கிரைண்டரும் வேணாம், அந்த மசாலா சாமானும் வேணாம்... மானங்கெட்ட மாமா நான் மாத்தி போடமாட்டேன்... போட்டதெல்லாம் போதும் மாமா, நீயும் கொஞ்சம் மாறு... நாம பட்டதெல்லாம் போதும், இப்ப மாறணுமே ஊரு...” என்று பாடலை பாடினார். இதை கேட்ட நா.த.க தொண்டர்கள் ஆரவாரத்தோடு சத்தமிட்டனர். 

ntk seeman trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe