Seeman questions Does acting alone make people worthy?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (27-10-25) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திரைக் கவர்ச்சியில் மூழ்கியுள்ள தமிழ் இளம் தலைமுறையினர் விழிப்புற்று எழு வேண்டும். அரசியல் என்பது ஒரு வாழ்வியல். நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் ஈடுபாட்டோடு அரசியல் செய்தார்கள் என்ற வரலாற்றை படித்து வாசித்து தெளிவு பெற வேண்டும். இல்லையென்றால் பெரும் சிக்கலாகி விடும். கலையை போற்ற வேண்டியது தான், கலைஞர்களைக் கொண்டாட வேண்டியது தான். ஆனால், நடித்தாலே போதும் நாட்டை ஆளும் தகுதி வருகிறது என மக்கள் கருதினால் கொடுமையானது.
வருங்கால தலைமுறையினர் போக போக அறிவார்ந்த சமூகமாக தான் வளர்ந்து மாற வேண்டும். ஒப்பனையை அழித்த உடனேயே அரியணையா? நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டை கொடுப்போம் ஆள்வதற்கு என்ற போக்கை அறிவார்ந்த சமூகம் ஏற்கிறதா?. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் திரைப்படம் இருக்கிறது. ஆனால், எந்த மாநிலத்திலும் நிகழாத விபத்து இந்த மாநிலத்தில் தொடர்கிறதே ஏன்?.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow Us