சட்ட மாமேதை பாபாசாகேப் அம்பேத்கரின் 67வது நினைவு நாள் இன்று (06.12.2025) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, அம்பேத்கரின் புகைப்படம் மற்றும் திருவுருவச்சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பல கோடி மக்களின் வாழ்க்கை இருளில் விளக்கேத்த வழி இல்லாமல் இருக்கும் போது மலை மேல் விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் அவர்கள் எங்கே இருந்தார்கள்? இன்றைக்கு தான் முருகன் கண்ணுக்கு தெரியுதா? ஏன் போன ஆண்டு இந்த விளக்கை ஏற்ற வரவில்லை. ஏனென்றால் இன்னும் 2 மாதத்தில் தேர்தல் வருது. எப்போதுமே இவர்களுடைய சிந்தனை, ஒருங்கிணைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதில்லை. அதை பிரித்து சிதைத்து தங்களுக்கான அதிகாரத்தை நிறுவுவது தான் இவர்களுடைய கோட்பாடு. அதை இந்த நிலத்திலும் நிறுவ நினைக்கிறார்கள்.

Advertisment

இது அரசின் கவனக்குறைவு தான். இவர்களுக்கு தெரியாமலேயா இதெல்லாம் நடக்குது? அரசு நினைத்திருந்தால் இதையெல்லாம் எப்போதே தடுத்திருக்கலாம். தமிழர்களுக்கு இறை வழிபாட்டை சொல்லிக் கொடுக்க வருவதுதான் சிரிப்பா இருக்கு. ஆனால் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிற மக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தமிழ்நாட்டில் பிளவு சிதைவு ஏற்படுத்துவது சாத்தியமில்லை. இது அருவருத்தக்க அரசியலாக பார்க்கிறேன். பல இந்துக்களுக்கு ஒரு வேளை சோறே 100 ஆண்டுக்கு மேல் கனவாக இருக்கிறது. நாட்டில் ஆளுகிற ஒரு கட்சி, இந்து மக்களின் கனவு என்று பேசுகிறது. இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு எப்படி ஆளுகின்ற கட்சி சொல்ல முடியும். இந்திய மக்களின் ஒற்றுமை என்று தானே பேச வேண்டும்” என்று கூறினார்.