பாரதியார் பிறந்தநாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா ஆகியவைகளை நிகழ்ச்சியை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ‘விஜில்’ என்ற பிரிவு கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாரதியாரை பாராட்டி, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

Advertisment

குறிப்பாக அவர், “பாரதியாரை நிராகரிக்கும் இடத்தில் என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியாரைப் பற்றி பேசுவது என்றால் பாகிஸ்தானில் கூட பேசுவேன். எந்த பிராமண எதிர்ப்பை காட்டி நீ திராவிட இருப்பை கட்டினியோ, அந்த பிராமண கடப்பாரையை கொண்டு இந்த பாலடைந்த கட்டடத்தை இடிப்பேன்” என்று கூறினார்.

Advertisment

ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியை விஜில் அமைப்பு செய்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டு சர்ச்சையானது. எதிர் சித்தாந்தம் உடைய அமைப்பின் மேடையில் சீமான் பேசியது, கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது ஏன் என சீமான் விளக்கமளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், ஆர்.எஸ்.எஸ் மேடையில் கலந்துகொண்டது விமர்சனங்களைப் பெற்றுள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “விமர்சனம் கூட இல்லையென்றால் எதற்கு கலந்து கொள்ள வேண்டும்? ஆர்.எஸ்.எஸ்ஸும் திராவிட கழகம் போல ஒரு சமூக இயக்கம் தான் என்று சொன்னது நானா இல்லை அவர்களா? ஆர்.எஸ்.எஸ் இயக்கம் என்றெல்லாம் எனக்கு தெரியாது. விஜில் என்ற இலக்கிய அமைப்பு பாரதியாரைப் பற்றி பேச வேண்டும் என்றார்கள். பாரதியாரைப் பற்றி நான் எங்கும் பேசுவேன். பாரதி இருக்கும் இடத்தில் தமிழ் இருக்கும், தமிழ் இருக்கும் இடத்தில் என் தாய் இருப்பாள். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பேன், அவ்வளவு தான்.

Advertisment

நாளைக்கு திமுகவையோ அல்லது திராவிட இயக்கத்தையோ பாரதியை பற்றி கூட்டம் போட சொல்லுங்கள், அங்கேயும் போய் பேசுகிறேன். 12 வருடம் திராவிட கழக மேடைகளில் நான் பேசினேன். அப்போது இனித்தது இப்போது கசக்குதா?. கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில், பா.ஜ.க ஐந்தாண்டு நிலையான ஆட்சியை கொடுத்தது, இந்தியா முழுமைக்கும் தன்னுடைய கிளையை பரப்புவதற்கு உதவியாக இருந்தவர் கலைஞர் தான் என்று ராஜ்நாத் சிங் பேசினார். அந்த வீடியோவை போட்டு காட்டவா? இன்றைக்கு வேல்ஸ் நிறுவனம் நடத்திய விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்கும் போது உங்கள் திமுக அமைச்சர்களும், எம்.பி கமல்ஹாசன் பங்கேற்கிறார்கள். எங்கே போய் நிற்கிறேன் என்று பார்க்காதே, என்ன பேசினேன் என்று பார்” என்று பேசினார்.