Seeman announces 100 candidates
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
இந்த சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யாருடனும் கூட்டணி அமைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார். அதன்படி, ஓவ்வொரு தொகுதியிலும் நடைபெற்று வந்த பொதுக்கூட்டங்களில் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை சீமான் தொடர்ந்து அறிவித்து வந்தார்.
இந்த நிலையில், முதற்கட்டமாக 100 தொகுதிகளிடைய வேட்பாளர்களை நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 100 தொகுதிகளுடைய வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 50 சதவீதம் ஆண்கள், 50 சதவீதம் பெண்கள் என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்ற கட்சியின் கொள்கை முடிவின் அடிப்படையில், ஆண், பெண்களுக்கு சமபலத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்தாண்டு பிப்ரவரி 21ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுடைய வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைப்பதாக சீமான் தெரிவித்திருந்த நிலையில், தற்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
Follow Us