நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள டெக்ஸா திரைப்படத்தின் பூஜை இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த திரைப்பட பூஜையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “ஒரு தவறை ஏற்றுக்கொண்டு, ஒப்புக்கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு மிகப்பெரிய மன பக்குவம் தேவைப்படுகிறது, அது பெரிய மனித மாண்பு. கரூரில் நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் என் தம்பி விஜய் சொல்கிறார். ஒரே ஒரு அடிப்படை கேள்வி. அவர் வரவில்லையென்றால் கூட்டம் இல்லை, கூட்டம் இல்லையென்றால் நெரிசல் இல்லை, நெரிசல் இல்லையென்றால் சாவு இல்லை. முதன்மையான காரணம் யார்?, அவர் தான். அதற்கு அவர் என்ன சொல்ல வேண்டுமென்றால், அந்த சம்பவத்துக்கு நானும் ஒரு பொறுப்பு ஆகிட்டேன், அதனால் நான் மக்களிடம் மிகுந்த மன துயரத்தோடு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொல்லிருந்தால் அது முடிஞ்சிருக்கும்.
ஆனால் அவர், இந்த சம்பவத்துக்கு நான் காரணம் இல்லை என் மேல் பழியை போட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார். இது சரியாக இல்லை. கரூரில் மட்டும் தான் மரண நிகழ்வு நடந்தது என்று சொல்கிறார்கள். அவருடைய முதல் மாநாட்டிலேயே 6 பேருக்கு மேல் உயிரிழப்பு நடந்திருக்கிறது. அவர் தனது கட்சியை கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். எங்கள் கட்சியில் லட்சக்கணக்கானோர் கூடுகிறார்கள், கொள்கைக்காக கூடும் போது ஒரு ஒழுங்கு இருந்தது. அது இல்லை எனும் போது நெரிசல் ஆகிவிடுகிறது. அதை தவிர்க்கணும். அதை அவர் ஒழுங்கு படுத்தவேண்டும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/seem-2026-03-06-19-13-16.jpg)