Security arrangements tightened for Republic Day celebrations
வருகின்ற திங்கட்கிழமை (26-01-26) அன்று 77 வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் போது இந்தியாவின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றப்படும். இதனை தொடர்ந்து நம் நாட்டின் பல்வேறு கலச்சாரங்களையும், நமது நாட்டின் வரலாறுகள் குறித்த சம்பவங்களும் காட்சிப்படுத்தப்படும். இதனையொட்டி தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தலைநகரில் கொண்டாடப்படவுள்ள குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு 10000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இந்த விழாவில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே சில அசம்பாவிதங்கள் அரங்கேறியிருக்கும் நிலையில், இந்த விழாவின் பொது எந்தவித அசம்பாவிதங்களும் நடந்து விடக்கூடாது என பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், உளவுத்துறையிலிருந்து பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமான அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலையடுத்து காவல்துறை கண்காணிப்புகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. அதே வேளையில், காவல்துறையில் தொழிநுட்பம் சார்த்த பாதுகாப்பு கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை போஸ்டரில் அல்கொய்தா பயங்கரவாதியின் புகைப்படம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது போன்ற எச்சரிக்கை போஸ்டரில் இந்த படத்தை பயன்படுவது இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது. அதில், டெல்லியை சேர்ந்த முகமது ரேஹான் என்பவர் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்றும், இவர் டெல்லி காவல்துறை மற்றும் உளவுத்துறையில் தேடப்படும் குற்றவாளி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொண்டாட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பலத்த பாதுகாப்புடன் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Follow Us