'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 30 நாட்கள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
சென்னையில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக இடைநிலை ஆசிரியர்கள் திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில் உள்ள 311 வது கோரிக்கையான 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பல்வேறு அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அரசு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையே இருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கு ஆசிரியர்கள் திரும்ப வேண்டும் என போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனை ஏற்று தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். போராட்டக் குழுவின் நிர்வாகி ராமன் இதனைத் தெரிவித்துள்ளார். இதனால் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சென்னையில் நடைபெற்று வந்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்பொழுது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/31/798-2026-01-31-19-09-38.jpg)