Second incident of stray dog bite in Krishnagiri Photograph: (krishnagiri)
நாடு முழுவதும் தொடர்ச்சியாக நாய் கடி சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் கூலித் தொழிலாளி ஒருவர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் அருகேயுள்ள அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான மல்லப்பா. கடந்த மாதம் 27 ஆம் தேதி தெருநாய் ஒன்று மல்லப்பாவை முகத்திலேயே கடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார். இது கிருஷ்ணகிரியில் நடக்கும் இரண்டாவது சம்பவமாகும். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குட்டப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியன் என்ற 24 வயது இளைஞர் இதேபோல் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தகுந்தது.