Science exhibition at Chidambaram Government Girls' Higher Secondary School
சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அறிவியல் மற்றும் மின்னியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமார் கலந்து கொண்டு, மாணவிகள் தயாரித்த அறிவியல் மற்றும் மின்னியல் மாதிரிகள், கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டினார்.
மாணவிகளின் ஆர்வம் மற்றும் புதுமையான சிந்தனையை அவர் பாராட்டி, எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக உயர வேண்டும் என வாழ்த்தினார். மேலும், சமூக ஆர்வலரும், அண்ணாமலைப் பல்கலை, ஓய்வு பெற்ற பேராசிரியருமான டி.எஸ்.எஸ்.ஞானகுமார், மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து சிறப்பு அறிவுரைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி, உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி மாணவிகளில் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் சிறந்த முயற்சியாக அமைந்ததாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Follow Us