schools in 2 districts closed at Heavy rains
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இத்தகைய சூழலில், நாளை (04.12.2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (04-12-25) விடுமுறை அளிப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Follow Us