தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (06.11.2025) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

Advertisment

அதோடு தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 11  மாவட்டங்களில் இன்று (06.11.2025) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் திருப்பத்தூரில் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எனவே கனமழை காரணமாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும்  இன்று (06.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்திரவல்லி பிறப்பித்துள்ளார். அதே சமயம் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.