Schools and colleges in Tenkasi and Tirunelveli will remain closed tomorrow
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பிரதான அணைகளின் நீர்மட்டம், குறிப்பாக பாபநாசம் அணையினுடைய நீர்மட்டம் ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக , திருநெல்வேலி மாவட்டம் நாளை (24-11-25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல், தென்காசி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Follow Us