schools and colleges closed tomorrow in chennai for Heavy rains
வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக டிட்வா புயல் காரணமாக சென்னையில் நேற்று அதிகாலை முதல் தற்போது வரை தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நாளையும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில், சென்னையில் நாளை இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Follow Us