Advertisment

பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை!

Y

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமி, ஆரம்பாக்கம் ரயில்வே சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார், சிறுமியை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்,  ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை பலவந்தமாக தூக்கிச் சென்று பாலியல் கொடுமை செய்து விட்டு அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.

Advertisment

சிறுமியை நீண்ட நேரமாக காணாததால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுமியைத் தேடி வந்த நிலையில், ஆரம்பக்கம் ரயில்வே சாலையருகே புதர் மண்டிய பகுதியில், இரத்தக் காயங்களுடன் சிறுமி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதிர்ந்து போன பெற்றோர், ஆரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் .

Advertisment

22

இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த வழக்கை கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையிலான தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர், அந்த  மர்ம நபர் சிறுமியை தூக்கிச் செல்லும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, அந்தப் பதிவை வைத்து தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

crime police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe