தஞ்சாவூர் மாவட்டம் கீழாவாசல் படைவெட்டி தெருவை சேர்ந்தவர் ராம் பிரசாத். இவர் தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள வீரராகவா அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு சென்று விட்டு பிற்பகல் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பள்ளியை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது 2க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் அவரை பள்ளி வாசலிலேயே சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் மாணவனை கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டறனர்.
அதே சமயம் தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் பள்ளி அருகில் மாணவன் ஒருவன் கடத்தி சென்ற சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow Us