பேருந்தின் மேல் ஏறி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் பயணம்!

102

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையிலிருந்து காம்பட்டு, பாச்சாபாளையம், ஆதனூர் வழியாகத் திருக்கோவிலூர் வரை தனியார் பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்தப் பேருந்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அதிகளவில் பள்ளி மாணவ-மாணவிகளே  பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 6:30 மணியளவில், உளுந்தூர்பேட்டையிலிருந்து நெமிலி, காம்பட்டு, பாச்சாபாளையம், ஆதனூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து திருக்கோவிலூருக்கு சென்றது. அப்போது, பேருந்திற்குள் இடம் இல்லாததால், சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்துள்ளனர்.

இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் படம்பிடித்து வெளியிட்டுள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் ஆபத்தான பயணத்தைத் தவிர்க்க, அந்தப் பகுதிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

govt bus kallakurichi school student
இதையும் படியுங்கள்
Subscribe