தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. கள்ளக்குறிச்சி, தென்காசி,கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிக கனமழை பொழிந்து வரும் வருகிறது.
நேற்று கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கணிதா, பாரிஜாதம், சின்னபொண்ணு மற்றும் அரியநாச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி ஆகிய 4 பேர் மக்காச்சோளத்திற்கு உரம் வைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் பார்வை இழந்தனர். இந்த சம்பவம் நேற்று சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்கள் இடி மின்னல் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் மின்னல் தாக்கி இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்த பொழுது மின்னல் தாக்கி படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.