காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் தினத்தையொட்டி சிதம்பரம் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை சிதம்பரம் ரயில் நிலையத்திற்குக் கல்விச் சுற்றுலா வருகை தந்தனர்.
பள்ளித் தாளாளர் பரணிதரன் தலைமையில்மாணவ, மாணவிகளுக்கு ஆலயம் லயன்ஸ் சங்கத்தினர் விஜய்சங்கர், மணிகண்டன், மேத்தா, ரயில்வே பயணிகள் சங்கத்தினர் ரியாஸ், சிவராம வீரப்பன் ஆகியோர் வரவேற்பு அளித்து, பிஸ்கட் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.அதனைத் தொடர்ந்து, ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மோகன் ரயில்வே துறை குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், ரயில் நிலையத்தில் எவ்வாறு பயணிகள் பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வில், ரயில்வே தனிப்பிரிவு காவலர் கோபாலகிருஷ்ணன் ரயில்வே பணியாளர்களுடன் இருந்தனர். ரயிலில் வந்த பயணிகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் டாடா காட்டி மகிழ்ந்தனர்.
Follow Us