தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா (Montha) என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (27-10-25) அதிகாலை 2:30 மணியளவில் மோன்தா புயல் உருவானது. நாளை காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் மச்சிலப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புயல் சின்னம் காரணமாக  தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூரில் நாளை (28/10/2025) ஒருநாள்  மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது. புயலை ஒட்டி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை  மற்றும் திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.