School holiday announcement issued in response to heavy rain Photograph: (rainfall)
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கொடைக்கானலில் மட்டும் மழை காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.