govt school Photograph: (thiruvallur)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அரசுப் பள்ளியில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ளது கொண்டாபுரம் பகுதி. அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மோகித் என்ற மாணவன் உணவு இடைவெளியின் பொழுது வெளியே வந்த பொழுது பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஏழாம் வகுப்பு மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
மாணவனின் உடலை மடியில் வைத்துக் கொண்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ரொம்ப நாளாகவே அந்த சுவர் இடியும் நிலையில் இருந்தது. அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த விபத்தில் காரணம் என ஊர் பொதுமக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us