வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரையை விற்று வந் கும்பலை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அதிகமாக குறிவைத்து போதை  மாத்திரை விற்பதாக பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு புகார்கள்கள் வந்தது. இந்தநிலையில் ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சில இடங்களில் அதிரடி ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மாவட்ட எஸ்பி தலைமையிலான போலீசார் 30 க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிலருடைய மொபைல் எண்களை சோதனை செய்ததில் அவர்கள் பலருக்கு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்றது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட மூன்று பேரிடம் இருந்து சுமார் 450-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 50க்கு மேற்பட்ட ஊசிகளை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதில் மேலும் பலர் சிக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.