பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆகியோர் மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
அதனை தொடர்ந்து, பசும்பொன் அருகே செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினர். இதையடுத்து பசும்பொன்னுக்கு சென்ற மூவரும் கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மூன்று பேரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முத்துராமலிங்க தேவருக்கு கூட்டாக மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவருடைய நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த சசிகலாவை, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் நினைவிட வளாகத்தில் சந்தித்துப் பேசினர். சசிகலா வருவதற்கு முன்பு அங்கிருந்து டிடிவி தினகரன் சென்ற நிலையில், செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்ப்வம் ஆகியோர் சந்தித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என மூன்று பேட்டி அளித்திருந்த நிலையில், சசிகலா வருவதற்கு முன்பு டிடிவி தினகரன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் சசிகலாவை சந்தித்துப் பேசினர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் பசும்பொன்னில் ஓரணியில் திரண்டியிருப்பது தமிழக அரசியலில் தகிப்பை உண்டாக்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/30/sos-2025-10-30-19-17-16.jpg)